நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷண சூரியப்பெரும நியமனம்
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகயிருந்த நிதி அமைச்சின் செயலாளர் பதவியை நிரப்புவதற்காக சூரியப்பெரும கடந்த வாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.