நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் போராட்டம்

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று புதன் கிழமை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.