நாவின்ன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.

விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.