நாளை வாக்குமூலம் வழங்கவுள்ளேன் – பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-04 தொலைக்காட்சியில் வெளியான காணொளி தொடர்பில் நாளை புதன்கிழமை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அப்பதிவில்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் கடைசி நாளின் இறுதி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல்-04 தொலைக்காட்சியில் வெளியான காணொளியில் என்னுடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வருகை தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைவாகவும், அதன் பின்னர் பொலிஸ் திணைக்களத்தினால் எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைவாகவும் நாளைய தினம் காலை 9:00 மணி அளவில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கவுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்