நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தத்தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை  ஞாயிற்றுக்கிழமை  முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதன்படி கொழும்புக்கு வரும் மக்களுக்காக மேலதிக நீண்ட தூர சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ் தொடருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படவுள்ளது.

மேலும்இ நாளை மறுதினம் (29.12.2025) அதிகாலை 5 மணிக்கு மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட தொடருந்து இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.