
நாளை முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்
மக்களை தொடர்ந்தும் ஒடுக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக , ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நாளை திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும், சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
