
நாளை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் , நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் , என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்