
நாளை மின்வெட்டு இல்லை
நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி கடந்த 23ஆம் திகதி முதல் மின்வெட்டு காலை நேரங்களில் மாத்திரம் 2 மணித்தியாலங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் பரீட்சை முடியும் வரை விஷேட நடைமுறை அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்ததற்கமைவாக நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
