நாளை மறுதினம் தேசிய துக்க தினம்

இலங்கையில் நாளை மறுதினம் சனிக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அன்றைய தினத்தை இலங்கையில் தேசிய துக்க தினமாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது

இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்