நாளை நோன்புப் பெருநாள்

நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1443 இஸ்லாமிய வருடத்தின் ஷவ்வால் மாத தலைப்பிறை இலங்கையின் எப்பாகத்திலும் தென்படாமை காரணமாக, ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை  செவ்வாய்க்கிழமை கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிக்கும் மாநாடு  மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் தலைமையில்  இடம்பெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.