நாளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விவாதம்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நாளை புதன்கிழமை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஏலவே, தீர்மானிக்கப்பட்ட வகையில் நாளை முற்பகல் 9.30 முதல் மாலை 5 மணி வரையில் ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இடம்பெற்று 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன்பின்னர் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை அனர்த்த நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்