நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது அவநம்பிக்கை பிரேரணை

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன்மூலம் குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்தவர்கள் விபரம் வெளிக்கொண்டுவரப்படுவதுடன்,  இரு நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிய முடியும் , எனவும் அவர் குறிப்பிட்டார்