நாளை சேவைகள் இடம்பெறாது
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக நாளை ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
