
நாளை உச்சம் கொடுக்கும் சூரியன்!
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வியாழக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை நண்பகல் 12.11க்கு ஹத்திகுச்சி, கலங்குட்டிய, ஹல்மில்லேவ, இப்பலோகம, பலுகஸ்வெவ மற்றும் ஹபரண ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.