நாளைய மின்வெட்டு விபரம்

நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை அமுல்ப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு விபரம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பரீட்சைக்கு வசதியாக   ஜூன் 01 வரை ஏனைய நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரீட்சை நடைபெறாத அந்நாட்களில் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 10 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.