
நாளையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது
நாளை வெள்ளிக்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளையும் குறித்த பணிகள் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
