நாளாந்தம் 4,000 மெற்றிக்தொன் எரிபொருள் விநியோகம்

நாளாந்தம் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் 92 ஒக்ரோன் பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள கப்பல்களில் இருந்து மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.