
நாரம்மல துப்பாக்கிசூடு : உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்
நாரம்மல பகுதியில் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாரம்மல பகுதியில் கடந்த 18 ஆம் திகதி பயணித்த பாரவூர்தி ஒன்றை சோதனையிடுவதற்காக உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பொலிஸாரின் தடுத்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த பாரவூர்தி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அந்த பாரவூர்தியை துரத்தி சென்று குறித்த பொலிஸார் இருவரும் தடுத்து, சோதனையிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் பாரவூர்தியின் சாரதி துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானதுடன், சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
