நாய் பற்றிய 10 வரிகள் தமிழ்

நாய் பற்றிய 10 வரிகள் தமிழ்

நாய் பற்றிய 10 வரிகள் தமிழ்

🐶🐶பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடு இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக விளங்குகிறது. நாய் குட்டி என்றாலே வீட்டில் அனைவரும் விரும்பி வளர்ப்பார்கள். நாய்களிலே பல வகையான நாய் இனங்கள் உள்ளன. புல்டாக், ஜெர்மன் ஷெப்பர்ட், கோலி, கோல்டன் ரெட்ரீவர், செயின்ட் பெர்னார்ட், கிரேஹவுண்ட், பிளட்ஹவுண்ட், சிவாவா, லாப்ரடோர், கிரேட் டேன், ரோட்வீலர், பாக்ஸர் மற்றும் காக்கர் ஸ்பானியல் என பல வகைகள்  உள்ளன. அந்தவகையில் நாய் பற்றி இப் பதிவில் அறிந்துகொள்வோம்.

  1. மனிதரிடம் இருக்கும் மோப்ப சக்தியை விட நாய்களின் மோப்ப சக்தி கிட்டத்தட்ட 10000 முதல் 100000 மடங்கு அதிகமானதாகும். மனிதர்களின் உணர்வுகளை கூட நாய்கள் அவைகளின் மோப்ப சக்தியின் மூலம் அறிந்துவிடும். உதாரணத்திற்கு நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் அந்த பய உணர்வினை கூட நாய் அதுவின் மோப்ப சக்தியால் கண்டுபிடித்து விடும்.
  2. உலகிலையே அதிகமாக நாய்களை செல்ல பிராணியாக வளர்த்து வரும் நாடு அமெரிக்கா.
  3. நாயானது 1 மணி நேரத்தில் 19 மைல் தூரம் வரை ஓடும் ஆற்றல் உடையது.
  4. மனிதர்கள் பேசும் 1000-ற்கும் மேற்பட்ட வார்த்தைகளை நாய் இனத்தினால் புரிந்துக்கொள்ள முடியும்
  5. நாய்கள் உயிர் வாழக்கூடிய ஆண்டானது 10-14 ஆண்டுகள் வரை.
  6. பொதுவாக நாய் குட்டிகளுக்கு 28 பற்கள் முளைத்திருக்கும். வளர்ந்த நாய்களுக்கு 42 பற்கள் இருக்கும்.
  7. இரவு நேரத்தில் மனிதர்களின் பார்வை திறனை விட நாய்களுடைய பார்வை திறன் அதிகமாக இருக்கும்.
  8. உலகிலையே மிகவும் பழமையான நாய் இனம் எகிப்திய நாட்டை சேர்ந்த சலுக்கி இனத்தை சேர்ந்த நாய் இனமாகும்.
  9. ஒரு பெண் நாய் அதன் துணை மற்றும் அவற்றின் நாய்க்குட்டிகளும் சேர்ந்து ஆறு ஆண்டுகளில் 67,000 நாய்க்குட்டிகளை பெற்றெடுக்க முடியுமாம்.
  10. ஒவ்வொரு வருடமும் உலக நாய்கள் தினம் ஆகஸ்ட் 26ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நாய் பற்றிய 10 வரிகள் தமிழ்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24