
நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில், நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலன்றி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
