நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை

இந்தியாவில் மதுரை தல்லாகுளத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் நடைபயிற்சி சென்றபோது பின் தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அவரை விரட்டத் தொடங்கிய நிலையில், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டவாறே குறித்த நபர் ஓடியதாகக் கூறப்படுகிறது. இருந்தும் அவரை விரட்டிச் சென்று வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தலைமறைவானது.

மேலும் உயிரிழந்த நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்றும் குடும்பப் பிரச்சனை காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்