
நான்கு வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் நான்கு வலம் புரி சங்குகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சங்குகளை விற்பனை செய்வதற்காக ஈடுபட்ட வேலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த சங்குகளின் மொத்த பெறுமதி நான்கு கோடியே 75 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது
வவுனியா பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரும் இறக்கக் கண்டி பகுதியை சேர்ந்த 33இ39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் .
குறித்த சங்குகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட மூவரையும் ரூபா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் மார்ச் 25 ஆ ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

