நான்கு மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்!

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வீதித் தடைகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளைச் சீர்செய்து விரைவில் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாடளாவிய ரீதியில் விநியோகத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சாதாரண நாட்களில் விநியோகிக்கப்படும் 75,000 சிலிண்டர்களின் எண்ணிக்கையை இன்று 91,000 ஆக அதிகரித்து, தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.