நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு!
இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 8,202 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 667 வீதி விபத்துக்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சாலை விபத்துக்களில், 709 பேர் இறந்துள்ளனர், 2160 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 102 பேர் பயணிகள், 179 பேர் பாதசாரிகள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பெரும்பாலான விபத்துக்களுக்கு மோட்டார் சைக்கிள்களே காரணம் என இனங்காணப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் வீதி விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்