நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்

-யாழ் நிருபர்-

சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வததாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது காண்டினங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்