நான்கு கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி
தனது தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே நான்கு கள்ளக் காதலர்களுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ரக்சியா என்ற பகுதியைச் சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இந்த விடயம் கணவருக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
சதித்திட்டம் தீட்டி கணவரை அழைத்து சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் சகோதரர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவரின் மனைவி , அவரது காதலர்கள் 4 பேரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நான்கு கள்ளக்காதலர்களும் இணைந்து நடத்திய இந்த கொலைச் சம்பவமானது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
