நானுஓயா பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் – துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறந்து வைப்பு
-நுவரெலியா நிருபர்-
நானுஓயா பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை மகளிர் மற்றும் சிறுவர் – துஸ்பிரயோக தடுப்புப் பணியகம், உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு, நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறந்து வைக்கப்பட்டது.