நானுஓயா கிளாஸ்ஷோ தோட்ட குடியிருப்பில் தீ பரவல்

-மஸ்கெலியா நிருபர்-

நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில், இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில், குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயினால் எரிந்து நாசமானது.

பாதிக்கப்பட்ட அந்த குடியிருப்பில் வசித்து ஐந்து பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

இத் தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இது தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும், நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.