
நானுஓயாவில் முச்சக்கரவண்டி திருட்டு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்று முன் தினம் திங்கட்கிழமை இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.
குறித் திருட்டுச் சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கறுப்பு நிற முச்சக்கர வண்டியினை உரிமையாளர் எரிபொருள் இன்றி தனது வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி தொடர்பான தகவல் கிடைத்தால் 0775343893 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு நானுஓயா பொலிஸார் மற்றும் உரிமையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
