நாட்டை மீள கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவதாக IMF உறுதி

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்குச் சர்வதேச நாணய நிதியம் கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கோசாக், ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார் .

பேரழிவின் பின்னரான மதிப்பீட்டு செயற்பாடுகளுக்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதிப்பீட்டு நடவடிக்கைகளின் பின்னர் இலங்கையின் பொருளாதார தாக்கங்கள் தொடர்பான தெளிவான தரவுகள் உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்குச் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் திட்டமிட்டபடி டிசம்பர் 15 ஆம் திகதி IMF நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கோசாக், தெரிவித்துள்ளார்.