
நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு நிச்சயமாக இல்லை -ஹரினி
தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படுத்தப்பட உள்ளது என்று நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, நாளை முதல் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, “நாட்டை திவாலாக்கிய அனுபவம் எங்களுக்கு நிச்சயமாக இல்லை” என்று பதிலளித்தார்.
எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுபவத்தைப் பெறும் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
