
நாட்டை உலுக்கிய பேரிடர் : 1.6 மில்லியன் மக்கள் பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட, 188,974 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள 1,374 முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பேரிடரினால் 479 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் 455,405 குடும்பங்களைச் சேர்ந்த, 1,614,790 பேர் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
