நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ள பிரமுகர்கள்

நாட்டில் இருந்து, விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் சில முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்புடன் கூடிய அதி சொகுசு வாகன பேரணி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கடற்படையினரின் இரு கப்பல்கள் மூலமாக சிலர் சென்றுள்ளனர்.

அவசரமாக சிலர் கப்பலில் ஏறும் காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில், துறைமுக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கப்பல்கள் இரண்டில் சிலர் புறப்பட்டு சென்றதனை உறுதி செய்துள்ள அதேவேளை, யார் எங்கே சென்றார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை.