நாட்டில் 40,000 இற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்
நாடு முழுவதும் 40,000 அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாகவும் இது பாரிய பாரதூரமான விடயமாகும் என அவர் கூறினார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்