நாட்டில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டு

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும், என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி ஒரு நாளில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது, நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த நிலை உருவாகும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.

இதனால் 270 மெகாவோட் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது,எரிபொருள் பிரச்சினையால் மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உரிய முகாமைத்துவம் இன்றி நீர் மின் உற்பத்தி செய்தால், நீர் மட்டம் குறைந்து தற்பொழுது உற்பத்தி செய்யும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும்.

மின்சார உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.