நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 3 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரும், இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொவிட் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 16,747 ஆக அதிகரித்துள்ளது.
