நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு 7.9 வீதமாக காணப்பட்ட 65 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 12.6 வீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 வயது முதல் 64 வயதுக்கிடைப்பட்டவர்களின் வீதம் 0.02 வீதத்தால் குறைவடைந்துள்ளது