நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று : ஒருவர் உயிரிழப்பு
கடந்த 25ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வாந்திபேதி காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொவிட் தொற்று இருப்பது தெரியவந்தது.
உயிரிழந்தவர் யக்கல, கொஸ்கந்தாவல பகுதியைச் சேர்ந்த கே.கே. பேமாவதி (63 வயது) என்ற திருமணமான பெண் ஆவார்
பின்னர், பெண்ணின் மூத்த சகோதரியும் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்கும் கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தொடர்ந்தும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று தகனம் செய்யப்பட்டது.
