நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிப்பு
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 75 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 64 ஆயிரத்து 900ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்று இரண்டு கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் நாட்டின் இதுவரையில் 16,537 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், தொற்றுறுதியான 740 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
