நாட்டில் தொடங்கியுள்ள மற்றுமொரு வரிசை

நாட்டில் சைக்கிள் மற்றும் உதிரிப்பாகங்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியால் மக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சந்தையில் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளதுடன் சைக்கிளின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

அதன்படி, சைக்கிளின் விலை 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 இலட்சம் வரை ஏறியுள்ளது.

இதேவேளை, சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகள் கூட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.