
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி
நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிப்படுவதற்காக வருகை தந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் பாதாள உலக குழுக்களுக்களுக்கிடையில் மோதல் ஆரம்பித்துள்ளது.
இது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, பாதாள உலக குழுவை முற்றாக அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அதை செய்து முடிக்க முடியுமென நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் அரசியல் பாதுகாப்பை கொண்டு இந்த குழு வளர்ந்துள்ளது.
தற்போது அவ்வாறான பாதுகாப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்ள்ளார்.
