
நாட்டில் தங்கத்தின் விலை இன்று 20,000 ரூபாவால் அதிகரிப்பு!
நாட்டில் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் 20,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 337,000 ரூபாவாக பதிவாகியுள்ளது
நேற்றைய தினம் அதன் விலை ரூ. 319,000 ஆகக் காணப்பட்டது.
இதேவேளை, நேற்று 345,000 ரூபாவாகவிருந்த “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
