நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிள் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 171 ஆகும்.

அத்துடன், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிள் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் 16 இலட்சத்து 4 ஆயிரத்து 18 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.