நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் வீணாக அச்சமடைய வேண்டாம் எனவும் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் விலையில் சாத்தியமான குறைப்பை எதிர்பார்த்து தங்கள் முன்பதிவுகளை தாமதப்படுத்துவதால் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் குறைந்தபட்ச கையிருப்பு அளவை 50% பராமரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு பராமரிக்க தவறிய நிலையங்களுக்கான உரிமங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்