நாட்டில் இன்று மேலும் ஒரு கொவிட் மரணம் பதிவு
இன்று வெள்ளிக்கிழமை நாட்டில் ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவராவார்.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,536 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 664,704 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 703 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
647,466 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் 50க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
