நாட்டில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம்

நாட்டில் மீண்டும் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அம்மை நோய்க்கான தடுப்பூசி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களை இலக்காக கொண்டு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.