
நாட்டில் இன்று தங்கத்தின் விலை
இலங்கையில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் கொழும்பு- செட்டியார் வீதி தங்காபரண விற்பனை நிலையங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 1,48,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 1,60,000 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 1,49,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 1,61,000 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடதக்கது.
