நாட்டில் இன்றும் அதிகூடிய வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.