
நாட்டிற்கு வரி வருவாய் முக்கியம்: சஜித்
நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வீழ்ச்சியடையச் செய்யாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாறாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தமது கட்சியின் நோக்கமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி வருவாய் முக்கியமானதாகும். எனினும் வரி அறவீடு, வெளிப்படைத்தன்மையுடன் இடம்பெற வேண்டும் என்பதுடன் வரி செலுத்தாதவர்களைக் கட்டாயம் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
