நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள்!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வெளியாகிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில், 15 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டை விட 4.5 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, 2012 ஆம் ஆண்டு 25.2 வீதமாக இருந்த சிறார்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 20.7 வீதமாக பதிவாகியுள்ளது.